JOIN TELEGRAM/download/button



TEST DOWNLOAD LINK BEGINS BELOW OF THIS PAGE .UNTIL READ THIS BELOW ONELINERS 👇👇👇

1.      அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல் முறைக்கு என்ன பெயர் ?

பசுமை புரட்சி

2.       பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் நார்மன் போர்லாக்

3.       நார்மன் போர்லாக் எந்த நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி?

அமெரிக்கா

4.      டாக்டர் நார்மன் போர்லாக் எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ?

1970

5.       டாக்டர் போர்லாகுடன் இணைந்து இந்தியாவில் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து பசுமை புரட்சியை கொண்டு வந்தவர் யார்?

 டாக்டர் மா.சா சுவாமிநாதன்

6.      இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்

7.       மெக்சிகோவின் அதிக மகசூல் பெறும் அரைக்குள்ள உயரமுடைய கோதுமை வகைகள் இருந்து என்ன கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன?

சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா

8.      எந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஐ ஆஅ 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்தி செய்தது?

 பிலிப்பைன்ஸ் நாடு

9.      ஐ ஆர் 8 எந்த ஆண்டு முதன் முதலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது ?

1966

10.   ஐ ஆர் 8 எந்த நெல் வகைகள்  இணைந்து உருவான கலப்பினம் ?  

இந்தோனேசியாவின் பீட்டா மற்றும் சீனாவின் டீ-ஜியோ-வூ-ஜென்

11.     கோ.நம்மாழ்வாரின் காலகட்டம் என்ன?

1938- 2013

12.    கோ நம்மாழ்வார் உருவாக்கிய அறக்கட்டளை எது?

நம்மாழ்வார் -உயிர் சூழல் நடுவம், உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்

13.    எந்த கோதுமை ரகம் இலை மற்றும் பட்டை துரு நோய் ,ஹில்பண்ட் முதலிய  நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?

ஹிம்கிரி

14.      எந்த காலிஃபிளவர்  ரகம் கருப்பு அழுகல் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?

பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து K-1

15.   எந்த தட்டைப்பயறு  ரகம் பாக்டீரிய கருகல் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?

பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து K-1

16.   எந்த கடுகு ரகம் உறிஞ்சி உண்ணும் பூச்சியான அசுவினி முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?

பூசா கவுரவ்

17.   எந்த அவரைக்காய் ரகம்  இலைத்தத்துப்பூச்சி, அசுவினி ,கனி துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?

பூசா செம்-2,பூசா செம்-3

18.   எந்த வெண்டை ரகம் தண்டு மற்றும் கனித்துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?

பூசா சவானி ,பூசா A4

19.   விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள் ,புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் முறைக்கு என்ன பெயர்?

உயிரூட்டச்சத்தேற்றம்

20.   உயிரூட்டச்சத்தேற்றம் மூலம் லைசின் மற்றும் அமினோ அமிலம் செறிந்த  கலப்பின மக்காச்சோள ரகங்கள் என்னென்ன?

புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா

21.   உயிரூட்டச்சத்தேற்றம் மூலம் புரதம் செரிந்த கோதுமை ரகம் எது?

அட்லஸ் 66

22.     அதிக மகசூல் தரும் தாவர வகைகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அறிமுகம் செய்யப்படும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

அயல் இனங்கள்

23.     புறத்தோற்றத்தை அடிப்படையாகக்கொண்டு சிறந்த தாவர ரகங்களை தாவர கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கும் பழம்பெரும் முறைக்கு என்ன பெயர் ?

தேர்வு செய்தல்

24.   எத்தனை வகையான தேர்வு முறைகள் உள்ளன?

மூன்று: கூட்டு தேர்வு முறை, தூய வரிசைத் தேர்வு முறை போத்துத் தேர்வு முறை(குளோனஸ் தேர்வு முறை)

25.     கூட்டுத் தேர்வுமுறை செயல்முறை எத்தனை தலைமுறைகளுக்கு தொடர்ந்து செய்யப்படுகிறது?

ஏழு அல்லது எட்டு தலைமுறைகள்

26.   தனி உயிரியில் இருந்து தற்காப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 தூய வரிசை

27.    தூய வரிசை வேறு எவ்வாறு அழைக்கப்படு?

தனித் தாவரத் தேர்வு

28.    ஒரு தனி தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலில்லா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குளோன்கள்

29.  உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான பல் வகைத் தாவரங்களின் கூட்டத்திலிருந்து விரும்பத்தக்க போத்துக்களை தேர்வு செய்யும் முறைக்கு என்ன பெயர்?

போத்து தேர்வு முறை

30.   பாலினப் பெருக்கம் செய்யும் தாவரங்களின் உடல செல்களில் இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் உள்ளன ?

இரண்டு




Your FILE will automatically DOWNLOAD within 15 seconds.





Post a Comment

Previous Post Next Post