DOWNLOAD BEGINS END OF THIS PAGE
1. அதிக
மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும்
செயல் முறைக்கு என்ன பெயர் ?
பசுமை புரட்சி
2. பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் நார்மன் போர்லாக்
3. நார்மன் போர்லாக் எந்த நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி?
அமெரிக்கா
4. டாக்டர் நார்மன் போர்லாக் எந்த ஆண்டு அமைதிக்கான
நோபல் பரிசை பெற்றார் ?
1970
5. டாக்டர் போர்லாகுடன் இணைந்து இந்தியாவில் மெக்சிகன்
கோதுமை வகைகளை அறிமுகம் செய்து பசுமை புரட்சியை கொண்டு வந்தவர் யார்?
டாக்டர் மா.சா சுவாமிநாதன்
6. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார் ?
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்
7. மெக்சிகோவின் அதிக மகசூல் பெறும் அரைக்குள்ள உயரமுடைய
கோதுமை வகைகள் இருந்து என்ன கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன?
சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா
8. எந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்
ஐ ஆஅ 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்தி செய்தது?
பிலிப்பைன்ஸ் நாடு
9. ஐ ஆர் 8 எந்த ஆண்டு முதன் முதலில் பிலிப்பைன்ஸ் மற்றும்
இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது ?
1966
10. ஐ ஆர் 8 எந்த நெல் வகைகள் இணைந்து உருவான கலப்பினம் ?
இந்தோனேசியாவின் பீட்டா மற்றும்
சீனாவின் டீ-ஜியோ-வூ-ஜென்
11. கோ.நம்மாழ்வாரின் காலகட்டம் என்ன?
1938- 2013
12. கோ நம்மாழ்வார் உருவாக்கிய அறக்கட்டளை எது?
நம்மாழ்வார் -உயிர் சூழல் நடுவம்,
உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
13. எந்த கோதுமை ரகம் இலை மற்றும் பட்டை துரு நோய் ,ஹில்பண்ட்
முதலிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை
பெற்றுள்ளது?
ஹிம்கிரி
14. எந்த காலிஃபிளவர் ரகம் கருப்பு அழுகல் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு
தன்மையை பெற்றுள்ளது?
பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து
K-1
15. எந்த
தட்டைப்பயறு ரகம் பாக்டீரிய கருகல் நோய்களுக்கு
எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?
பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து
K-1
16. எந்த
கடுகு ரகம் உறிஞ்சி உண்ணும் பூச்சியான அசுவினி முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத்
தன்மை பெற்றுள்ளது?
பூசா கவுரவ்
17. எந்த
அவரைக்காய் ரகம் இலைத்தத்துப்பூச்சி, அசுவினி
,கனி துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?
பூசா செம்-2,பூசா செம்-3
18. எந்த
வெண்டை ரகம் தண்டு மற்றும் கனித்துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத்
தன்மை பெற்றுள்ளது?
பூசா சவானி ,பூசா A4
19. விரும்பத்தக்க
ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள் ,புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை
உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் முறைக்கு என்ன பெயர்?
உயிரூட்டச்சத்தேற்றம்
20. உயிரூட்டச்சத்தேற்றம் மூலம் லைசின் மற்றும் அமினோ
அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்கள்
என்னென்ன?
புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா
21. உயிரூட்டச்சத்தேற்றம்
மூலம் புரதம் செரிந்த கோதுமை ரகம் எது?
அட்லஸ் 66
22. அதிக மகசூல் தரும் தாவர வகைகளில் ஒரு இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு அறிமுகம் செய்யப்படும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
அயல் இனங்கள்
23. புறத்தோற்றத்தை அடிப்படையாகக்கொண்டு சிறந்த தாவர
ரகங்களை தாவர கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கும் பழம்பெரும் முறைக்கு என்ன பெயர்
?
தேர்வு செய்தல்
24. எத்தனை வகையான தேர்வு முறைகள் உள்ளன?
மூன்று: கூட்டு தேர்வு முறை,
தூய வரிசைத் தேர்வு முறை போத்துத் தேர்வு முறை(குளோனஸ் தேர்வு முறை)
25. கூட்டுத் தேர்வுமுறை செயல்முறை எத்தனை தலைமுறைகளுக்கு
தொடர்ந்து செய்யப்படுகிறது?
ஏழு அல்லது எட்டு தலைமுறைகள்
26. தனி உயிரியில் இருந்து தற்காப்பு மூலம் பெறப்பட்ட
சந்ததி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தூய வரிசை
27. தூய வரிசை வேறு எவ்வாறு அழைக்கப்படு?
தனித் தாவரத் தேர்வு
28. ஒரு தனி தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது
பாலில்லா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளோன்கள்
29. உடலப்
பெருக்கத்தின் மூலம் உருவான பல் வகைத் தாவரங்களின் கூட்டத்திலிருந்து விரும்பத்தக்க
போத்துக்களை தேர்வு செய்யும் முறைக்கு என்ன பெயர்?
போத்து தேர்வு முறை
30. பாலினப் பெருக்கம் செய்யும் தாவரங்களின் உடல செல்களில்
இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் உள்ளன ?
இரண்டு
31. இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை மயம்
32. இன செல்களில் ஒரே ஒரு தொகுதி குரோமோசோம் மட்டும்
உள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒற்றை மயம்
33. இரண்டுக்கும்
மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் என்று அழைக்கப்படும்?
பன்மயம்
34. ஒரு உயிரினத்தின் டிஎன்ஏவின் நியூக்ளியோடைடு வரிசையில்
திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சடுதி மாற்றம்
35. சடுதி மாற்றத்திற்கு உட்படும் உயிரினம் எவ்வாறு
அழைக்கப்படும்?
சடுதி மாற்றமுற்ற உயிரினம்
36. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அணுசக்தி ஆற்றலை
பயிர் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் ஒரு கருத்தாக்கம் எது?
காமாத் தோட்டம் அல்லது அணுப்
பூங்கா
37. காமாத்
தோட்டம் அல்லது அணுப் பூங்கா என்பது என்ன வகையான பயிர் பெருக்க முறையாகும்?
தூண்டப்பட்ட சடுதிமாற்றப் பயிர்
பெருக்க முறை
38. எந்த
தனிமத்தில் இருந்து வரும் காமா கதிர்கள் பயிர் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களை
கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டன?
கோபால்ட் 60 அல்லது சீசியம்-
137
39. சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மியூடாஜென்கள் அல்லது சடுதி
மாற்றத் தூண்டிகள்
40. இயற்பியல்
சடுதி மாற்றம் தூண்டிகள் என்னென்ன?
எக்ஸ் கதிர்கள், ஆல்பா, பீட்டா,
காமா கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை
41. சடுதி மாற்றத்தை தூண்டும் வேதிப்பொருட்கள் எவ்வாறு
அழைக்கப்படும்?
வேதியியல் சடுதி மாற்றத் தூண்டிகள்
42. வேதியியல் சடுதி மாற்றம் துண்டிகளுக்கு எடுத்துக்காட்டு?
கடுகு வாயு மற்றும் நைட்ரஸ்
அமிலம்
43. எந்த கோதுமை ரகத்திலிருந்து காமாக்கதிர்களை பயன்படுத்தி
சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது?
ஸொனாரா-64
44. சடுதி மாற்ற பயிர் பெருக்கத்தின் மூலம் உவர் தன்மையைத்
தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அரிசி ரகம் எது?
அட்டாமிட்டா 2
45. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைத் தாவரங்களை கலப்பு
செய்து அவற்றின் விரும்பத்தக்க பண்புகளை கலப்புயிர் என்ற ஒரே சந்ததியில் கொண்டு வரும்
செயல் முறைக்கு என்ன பெயர்?
கலப்பினமாக்கம்
46. மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் எது?
டிரிட்டிக்கேல்
47. டிரிட்டிக்கேல் எவற்றைக் கலப்பு செய்ததால் கிடைக்கப்பெற்றது?
கோதுமை (டிரிட்டிகம் டியூரம்)
மற்றும் ரை(சீகேல் சிரியேல்)
48. ஒரே சிற்றினத்திற்குள்ளே, ஒரு பொது மூதாதையரிடமிருந்து
தோன்றிய விலங்குகளின் குழு எவ்வாறு அழைக்கப்படும்?
இனம்
49. சில சிறப்பான பண்புகளை கொண்ட வெவ்வேறு வகையான பெற்றோர்களை
கலப்பு செய்து அத்தகு விரும்பத்தக்க பண்புகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதற்கு என்ன பெயர் ?
இனக்கலப்பு
50. ஒரே இனத்தை சேர்ந்த தொடர்புடைய விலங்குகளுக்கு இடையே
நடைபெறக்கூடிய கலப்பை எவ்வாறு அழைக்கப்படும்?
உட்கலப்பு
Post a Comment