1. தாவரங்களின்
வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு நீர் மற்றும் கனிம உப்புக்கள் எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும்
செல்கின்றன?
2. தாவரங்களின் இலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள்
எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கின்றன?
3. தாவரங்களில்
பொருட்கள் மொத்தமாக கடத்தும் திசுக்களின் மூலம் கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை
எடுத்துச் செல்வதற்கு என்ன பெயர் ?
5. செல்களின் உள்ளே மற்றும் வெளியே பொருட்கள் கடத்தப்படுவது
என்ன முறையில் நடைபெறுகின்றன?
6. திட திரவ வாயு பொருட்கள் செறிவு அதிகம் உள்ள பகுதியிலிருந்து
செறிவு குறைவான பகுதிக்கு எவ்வித ஆற்றலின் உதவியின்றி கடத்தப்படும் நிகழ்ச்சிக்கு என்ன
பெயர்?
7. கடத்து
புரதங்கள் எந்த கடத்தலில் ஈடுபடுகின்றன?
8. புரதங்கள்
ஆற்றலைப் பயன்படுத்தி சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துவதால் இந்த புரதங்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
9. ஒரு
தாவர செல்லைக் ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும் போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால்
புரோட்டோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கிவிடுகிறது இந்நிகழ்விற்கு என்ன பெயர்?
10. உயிரற்ற தாவர பொருட்கள் நீரில் வைக்கப்படும்போது
நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
Post a Comment